பக்கங்கள்

சனி, 26 மார்ச், 2011

                       காதல் 
   என்  புதிய ^ ஆத்திச்சூடி

அ       ன்பு  பரிமாற அம்மாவாய் வந்தாள

ஆ      சை காட்டி காதலைத் தந்தாள்

இ       தயத்தை எடுத்துக்கொள் என்றாள்

ஈ        ர உதடுகளில் முத்தம் தந்தாள்

உ      லக அழகி விருது பெற்றாள்

ஊ    க்கம் தந்தாள் நான் உயர்வு பெற

எ      க்காலமும் உன்னோடு என்று

ஏ      மாற்றி விட்டுப் பறந்து சென்றாள்

ஐ     ந்து நாட்கள் கழித்து வந்தாள்

ஒ    ட்டகமாய் ( பாலைவனத்தில் )  வாழ்ந்தேன் என்றாள்

ஓ    ட்டு  வீட்டில் வாழ என்னிடம் சம்மதம் கேட்டாள்

ஒள   காரமாய் சொனேன் "நீ என் தோழி என்று"

 .
. .  இது மூன்று புள்ளி அல்ல உனக்கு நான் இட்ட முற்றுப் புள்ளி . 

                    
      
நான்
இன்று முதல்
காதலிப்பதை 
நிறுத்திவிடப்போகின்றேன்
காதலியை அல்ல 
காதலை....
 
என்னைக் காதலிக்க
என்ன தகுதி 
உள்ளது என்று கேட்டாயே?
என்னை இப்படி (கவிதைகளை) கிறுக்க வைத்தவளே

நீ தான் என்பதையும் மறந்து .........











உனக்கு

என்னைத்தானே பிடிக்கவில்லை

எனக்கு

உன்னைத்தவிர

யாரையுமே பிடிக்கவில்லை .








பிரம்மன் நிச்சயம் உன்னை 
"உளி" கொண்டு 
செதுக்கியிருக்கமாட்டான்   அப்படி
நிகழ்ந்திருந்தால் --நீ 
"அழகி" எப்படி ஆகிருப்பாய்.. 
உனக்கான தேடல்கள் தான்
கவிதை என்றேன் நான் 
கவிதைகள் எல்லாம் கற்பனை என்கிறாய் நீ 
வா.. நம்மை இணைத்த  
காதலையே கேட்டுவிடுவோம்
நம் கேள்வித் துணுக்குகளை.........

வியாழன், 24 மார்ச், 2011

"ஐ  லவ் யூ டா
ஐ  லவ் யூ டா" என்று  
நீ
எழுதித் தந்த காகிதங்கள் 
இன்று தான் உயிர் பெறுகின்றன ...
நீ  ஏமாற்றிய  நாட்களில் கூட 
அவைகள் என்னை காதலிக்கின்றன .......

எந்த விஷயமாய் இருந்தாலும்
தயங்காமல் என்னிடம் சொல்லிவிடுவாயே-ஏன் 
நீ இனொருவனை காதலிக்குறேன் 
என்பதை சொல்ல 
இவ்வளவு தயங்குகிறாய் ..........
எவ்வளவு 
உறக்கத்தில் இருந்தாலும்-உன் 
பெயரை மட்டும் சரியாய் உளறிவிடுகின்றேன்
கனவிலாவது நம் காதல் 
கனிந்து விடக் கூடாதா என்று 
உன்னை மறந்துவிட்டேன் என்று
கவிதை எழுதினாலும்
ஏதோ ஓர் இடத்தில்-உன்
புன்னகையெல்லாம்
எழுத்துக்களாய் மாறிவிடுகிறது
உனக்கான நினைவுகளாய்...
எப்படி மறப்பது உன்னை...
உன் கன்னத்தில் விழும் குழி
அழகாய்த்தான் இருக்கிறது
யாருக்குத் தெரியும்
அந்தக் குழியில் எத்தனை
ஆண்கள் விழுந்தார்கள் என்று..
"நீ"
உறங்கச் செல்லும் போது
எனக்கு ஒரு முத்தமாவது தந்துவிடு
ஏன் தெரியுமா...
உன்னை நினைக்கும் என் இதயம்
எப்பொழுது வேண்டுமானாலும்
துடிப்பதை நிறுத்த நேரிடலாம்...
மெல்லிய உன் உதடுகளில் கூட
கவிதை எழுதிவிடுவேன்..
கவலைப்படாதே!..
பேனாவால் அல்ல-என்
உதடுகளால்
உன் கேள்வி புரிகிறது
தலைப்புதானே!
"முத்தம்"

வியாழன், 17 மார்ச், 2011

விபத்து என்று தெரிந்தும் 
விழுந்தேன்
    " காதல்  "
வாகனத்தில் .








நீ எந்தப் பூவை சூடிக் கொண்டாலும் 
அந்தப் பூக்களும் உன்னைப் போலவே 
அழகாய் மாறிவிடுகிறது....
நீயே சொல் ..
நான் யாரை காதலிப்பது...